அரசு பள்ளியில் சப்-கலெக்டர் ஆய்வு
வத்திராயிருப்பு அருகே அரசு பள்ளியில் சப்-கலெக்டர் ஆய்வு மேற்ெகாண்டார்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட ஆகாசம்பட்டியில் அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் உள்ள சமையலறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்வதற்காக வாங்கிய காய்கறிகளை பார்வையிட்டு ஆய்வு ேமற்கொண்டார். பின்னர் வகுப்புகளுக்கு சென்று பள்ளி மாணவர்களிடம் திருக்குறள், வாய்ப்பாடு ஆகியவற்றை கூறும்படி கேட்டார். புதிய வகுப்பறை கட்டும் பணிகளை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பாண்டியராஜன், சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story