போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 28 Sep 2023 9:00 PM GMT (Updated: 28 Sep 2023 9:00 PM GMT)

சேரம்பாடி அருகே போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளியான குமார் உயிரிழந்தார். இந்தநிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாற்றுத்திறனாளியை யானை தாக்கிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் காட்டு யானைகளை கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். கண்காணிப்பு கோபுரம் அமைத்து, அகழி வெட்ட வேண்டும் என்றனர். அதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்கார், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் அமுதா, வனச்சரகர்கள் அய்யனார், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story