நெல் அரவை ஆலைகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


நெல் அரவை ஆலைகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

நெல் அரவை ஆலைகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.

திருச்சி

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், அரிசி ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜிபி. அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் மணப்பாறை, புலிவலம், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய இடங்களில் ரேஷன் அரிசிக்காக நெல் அரவை செய்யும் அரிசி ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து வரும் நெல் தரமாக வருகிறதா? அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரமாக இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல் ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு வேறு எங்கேயும் கடத்தப்படுகிறதா? எனவும் சோதனை செய்தனர். இதில் எந்த முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story