பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயிலில் சோலார் தகடு பொருத்தம்


பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயிலில் சோலார் தகடு பொருத்தம்
x

பழனி முருகன் கோவில் 2-வது மின்இழுவை ரெயிலில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின்தகடு.


தினத்தந்தி 28 Sep 2022 7:00 PM GMT (Updated: 28 Sep 2022 7:00 PM GMT)

பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயிலில் மின்சாதனங்களை இயக்குவதற்காக சோலார் தகடு பொருத்தப்பட்டது.

திண்டுக்கல்


பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேல்புறத்துக்கு செல்ல மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் மேற்கு கிரிவிதியில் அமைந்துள்ள மின்இழுவை ரெயில்நிலையத்தில் இருந்து 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயிலில் பயணம் செய்ய 8 நிமிடம் ஆகும்.

இந்த ரெயிலில் பயணம் செய்யும் பக்தர்களிள் வசதிக்காக பெட்டிகளின் உள்பகுதியில் மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் முருகன் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும். மேலும் இரவில் ஜொலிக்கும் வகையில் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 1-வது மின்இழுவை ரெயில் பெட்டியின் மேற்புறத்தில் சோலார் மின்தகடு பொருத்தப்பட்டது.

சோதனை ஓட்டம்

இதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு பெட்டிகளின் உள்பகுதியில் உள்ள மின்விளக்குகள், மின்விசிறிகள், வண்ண விளக்குகள் ஆகியவை இயங்கும் வகையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அது வெற்றிகரமாக நிறைவடைந்ததால் தற்போது 2-வது மின்இழுவை ரெயிலிலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சோலார் மின்தகடு பொருத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இதில் கிடைக்கும் மின்சாரம் மூலம் மின்விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்ட மின்சாதனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பக்தர்கள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.


Next Story