மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காதொலி கருவி


மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காதொலி கருவி
x

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் காதொலி கருவி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு கருவியை உடனடியாக கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 376 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் 11 குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகையாக ரூ.14 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

காதொலி கருவி

மேலும் கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார். பின்னர் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சந்திரசேகரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராமசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story