நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்ய வேண்டும் அறிவுறுத்தல்


நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்ய வேண்டும்  அறிவுறுத்தல்
x

நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

கரூர்

கலந்தாய்வு கூட்டம்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றங்களை தடுப்பது குறித்த போலீசாருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும், கஞ்சா கடத்தல், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீதும் சட்டப்படி எடுக்கப்படும், இரவு, பகல் நேரங்களில் திட்டமிட்டு செயல்பட்டு திருடும் குற்றவாளிகள், வெளிநாட்டினர், மதம் சார்ந்த பிரிவினைவாதிகள் ஆகியோரை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராட்டு

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, அதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும், உயிரிழப்புகளை தடுக்க கரூர் மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து குற்ற வழக்குகளை சிறப்பாக கையாண்ட போலீசாரை அவர் பாராட்டினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Next Story