நடமாடும் மருத்துவமனை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்


நடமாடும் மருத்துவமனை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்
x

நடமாடும் மருத்துவமனை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு பதிவேடு, டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, படுக்கை வசதி, சிகிச்சை அளிக்கப்படும் விதம், சுகாதார வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மேலமாத்தூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கால்நடை மருத்துவ சேவை கிடைக்கப்பெறாத தொலைதூர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவமனை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் காடூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பணியாளர்களுக்கு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பிரேமலதா, குன்னம் தாசில்தார் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story