விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டி அவமதிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டி அவமதிப்பு
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டி அவமதிக்கப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் கோடாலிகருப்பூர் கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்ததாக தெரிகிறது. இது குறித்து கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மாதவன் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story