காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக சாலையில் உள்ள காப்பீட்டு நிறுவனம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேஷனல் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சங்க நிர்வாகி மூவேந்தன் தலைமை தாங்கினார். மதுரை மணடல பொது காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்க மாவட்ட தலைவா் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story