இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா அலுவலகம் முன்பு அரசு பொது காப்பீட்டுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தியாகராஜன் தலைமை தாங்கினார். நாடிமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு தொடங்கி வைத்து பேசினார். இதில் ஜெயராஜ், சேதுராமன், சரண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வினை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி சத்தியநாதன் நிறைவு செய்து பேசினார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் பூட்டப்பட்டு இருந்தன.







Next Story