இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் கிளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேசபுரத்தில் உள்ள பெரம்பலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பழனியாண்டி கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும், 12 மணி நேர வேலை திட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story