விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்


விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி வேளாண்மை துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் எஸ்.காரைக்குடி கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது. இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவத்தினை பற்றி விளக்கி பேசினார்.

வேளாண்மை துறையில் செயல்படும் மத்திய அரசின் திட்டம் மற்றும் மாநில அரசின் திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகளுக்கு விதை தேர்வு, விதை நேர்த்தி செயல் விளக்கம், சாகுபடி செய்யும் நிலத்தை தயார் செய்யும் தொழில்நுட்பங்கள் பற்றி ராஜேஷ் எடுத்துரைத்தார் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா அரசின் மானிய திட்டங்கள் பற்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் தம்பிதுரை, உதவியை தொழில்நுட்ப மேலாளர்கள் திவ்யா, செல்வி, முத்து சரண்யா ஆகியோர் செய்திருந்தார்கள்.


Next Story