விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி


விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி
x
தினத்தந்தி 16 Jun 2023 12:00 AM IST (Updated: 16 Jun 2023 11:27 AM IST)
t-max-icont-min-icon

குரும்பலூரில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

ஐதராபாத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்பங்கள் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய வறண்ட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதியுதவியுடன், நிக்ரா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் தலைவர் நேதாஜி மாரியப்பன் தொடங்கி வைத்து பேசும்போது, பயிர் சாகுபடியை மட்டும் விவசாயிகள் நம்பியில்லாமல் கறவை மாடு, மீன், கோழி, ஆடு, காடை மற்றும் காளான் வளர்ப்பு ஆகிய உபத்தொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம் என்றார். தொடர்ந்து, உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் புனிதாவதி, பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத்தில் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணைப்பொருட்கள், பண்ணைக்கழிவுகளை சிறந்த முறையில் சுழற்சி செய்தல், மண்புழு உரம் உற்பத்தி செய்தல், உரச்செலவை கட்டுப்படுத்துதல் குறித்தும், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் வசந்தகுமார், மானாவாரி மற்றும் தரிசு நிலங்களுக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், கால்நடை அறவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் வினோத், அசோலா உற்பத்தி, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்தும் விளக்கினர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மண்புழு உரம், அசோலா வளர்த்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு மண்புழு மற்றும் அசோலா வளர்ப்பதற்கு சில்பாலின் சீட் வழங்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story