வெயிலின் தாக்கம் அதிகரிப்பு:தென்னை நார்களை உலர வைக்கும் பணி தீவிரம்


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு:தென்னை நார்களை உலர வைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தென்னை நார்களை உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

நெகமம்

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தென்னை நார்களை உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்னை நார் தொழிற்சாலை

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளது. இதில் நெகமம் வட்டார பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தென்னை நார் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நார் உலர வைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மழை காலங்களில் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருக்கும். அதை ஈடுகட்ட வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது தென்னை நாரை உலர வைத்து, அதன் உற்பத்தியை பெருக்குகின்றனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இருந்த மாதங்களில், நார் உற்பத்தி மந்தமானது. பருவமழைக்கு பிறகு, கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால், தென்னை நார் உலர வைக்கும் பணியில் தற்போது விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி மேலும் அதிகரிக்கும்

தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- பிப்ரவரி மாதம் முதல் மே வரை மழை குறைவாக இருக்கும் போது நார் உலரவைக்கும் பணியில் தீவிரம் காட்டுவோம். கடந்த சில மாதங்களாக சுற்று வட்டார பகுதியில் மழை பொழிவு இன்றி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நார் உலர வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பனிப்பொழிவு இருப்பதால், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, தென்னை நார் உலர வைக்கும் பணி அதிகரிக்கப்படுகிறது. தற்போது வடமாநில தொழிலாளர்களை கொண்டு, தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்தநேரத்தில் நார் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story