முதல்போக நெல் நடவு பணி தீவிரம்


முதல்போக நெல் நடவு பணி தீவிரம்
x

வீரபாண்டி பகுதியில் முதல்போக நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதி குச்சனூர் அருகே உள்ள கூழையனூரில் தொடங்கி வீரபாண்டி மற்றும் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது‌. முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இப்பகுதியின் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு போன்ற தானிய வகைகளும் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது வடகிழக்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் முல்லைப்பெரியாற்றின் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதி வரை போதுமான அளவு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு வீரபாண்டி, உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் முதல்போக நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, நீர்வரத்து இன்னும் கூடுதலாக இருந்தால் நல்ல முறையில் விளைச்சல் ஏற்படும். இதற்கு வருண பகவான் தான் கருணை காட்ட வேண்டும் என்றனர்.

1 More update

Next Story