சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்


சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போதுமான மரம் அகற்றும் எந்திரம், மணல் மூட்டைகள், பொக்லைன் எந்திர தளவாடங்கள் மற்றும் சாலை பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி நடக்கிறது. அதன்படி சாலைகளில் உள்ள சிறு, சிறு பள்ளங்கள் தார் ஊற்றி சரி செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குழாய் அமைக்கும் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களுக்கும் தார் ஊற்றி சாலையில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை பராமரிப்பு பணி இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.


Next Story