உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரம்


உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரம்
x

உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரமாக நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வெளியூரில் இருந்து தினமும் திருச்சிக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிந்தாமணி அண்ணாசிலை முதல் அரிஸ்டோ மேம்பாலம் வரை மேலும் ஒரு உயர்மட்ட சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் உயர்மட்ட சாலையை எவ்வாறு அமைப்பது என்று திட்ட மதிப்பீடு செய்து, வரைபடம் தயாரிக்க ரூ.2¾ கோடியை அரசு ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது சிந்தாமணி அண்ணா சிலை முதல் அரிஸ்டோ மேம்பாலம் வரை மண் பரிசோதனை செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் திருச்சி ஜங்ஷன் பகுதியில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த உயர்மட்ட சாலை அமையும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காவிரி பாலத்தில் இருந்து ஜங்ஷன் ரெயில் நிலையத்தை குறைந்த நேரத்தில் வந்தடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story