தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்
தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்
வால்பாறை
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையில் இருக்கும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை சோலையாறு அணை பகுதியில் தமிழக-கேரள எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் அமைந்துள்ள சேக்கல்முடி போலீஸ் சோதனை சாவடி மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறை சோதனை சாவடியில் தாசில்தார் ஜோதிபாசு அறிவுரையின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரன், சேக்கல்முடி போலீசார், வனத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சிறிய வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னரே தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.