பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்


பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
x

கோடை விடுமுறைக்கு பின் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கோடை விடுமுறைக்கு பின் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கோட்டூர், நெகமம், ஆழியாறு போன்ற இடங்களில் உள்ள பள்ளிகளில் பணியாளர்கள் வகுப்பறைகள், பள்ளி வளாகம், சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால் வகுப்பறைகளின் மேற்கூரைகள், ஜன்னல்கள், வளாகங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மை பணி நடந்து வருகிறது.

தூய்மை பணிகள்

மேலும் பள்ளி வளாகங்களில் உள்ள மாணவ-மாணவிகள் கழிப்பிடங்கள் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யப்பட்டன. இருக்கைகள், மேஜைகள் தூய்மைப்படுத்தப்பட்டது. குடிநீர் தொட்டியில் குடிநீர் தரமாக உள்ளதா என்று தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மேற்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தூய்மை பணிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். பள்ளியின் சிறப்பு அம்சங்கள், விளையாட்டு மைதானம், சிறப்பு பயிற்சிகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்து கூறி மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.


Next Story