வறட்சியை தாங்கி வளரும் எள் பயிர் சாகுபடி தீவிரம்


வறட்சியை தாங்கி வளரும் எள் பயிர் சாகுபடி தீவிரம்
x

அறந்தாங்கி பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் எள் பயிர் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை

உடலுக்கு நல்ல மருந்து

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அழிந்து வரும் எள்பயிர் ஒரு சில இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை விளையும் எள் தானிய பயிர் ஆகும். இந்த பயிர் சாகுபடிக்கு ஈரப்பதம் மட்டும் இருந்தால் போதுமானது. வறட்சியை தாங்க கூடியதாகும். எள் எண்ணெய் உடல் சூட்டை தணிக்கவும், உணவில் சேர்த்துக் கொள்ளவும் நல்ல மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், உஷ்ணத்தை தணிக்க கூடியது நல்லெண்ணெய். ஒரு மூடி நல்லெண்ணெய் குடித்தால் மலச்சிக்கல் தீர்க்கக் கூடிய வல்லமை எள் எண்ணெய் ஆகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. ரத்த அழுத்தத்தை குணப்படுத்துகிறது. இதய நோய், மலச்சிக்கல், உடலில் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.

எள் பயிர் சாகுபடி

அறந்தாங்கி பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் முன்ெபல்லாம் எள் சாகுபடி நடைபெற்றது. ஆனால் இது படிப்படியாக குறைந்தது. இப்போது அரசர்குளம், சுப்ரமணியபுரம், நாகுடி, கண்டிச்சங்காடு, ஏகணி வயல், ஏகப்பெருமாளூர், தினையாக்குடி, திருவாப்பாடி, சிங்கவனம், கோபாலபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த அளவுக்கு எள் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

70 நாட்களில் அறுவடை செய்யப்படும் இந்த எள் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 750 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.

சாம்பல் சத்து

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் எள் சாகுபடி செய்ய வேண்டிய பயிர் ஆகும். இதில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு நிற எள் என்று தரம் பார்த்து பிரிக்கலாம். இது போல் 3 முறை செய்தால் நன்றாக இருக்கும். எள் தட்டையை ஒரு இடத்தில் கொட்டி தீ வைத்து கொளுத்தி விட்டால் சாம்பல் சத்து ஏற்படும் என்று கூறினர்.

1 More update

Next Story