தொற்று பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


தொற்று பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அச்சுறுத்தும் கொரோனா

கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த கொரோனா கடந்த மாதத்துக்கு முன்பு வரை கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று திடீரென்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே தொற்று பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரித்து உள்ளார்.

தொற்று அதிகரிப்பு

அதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அவ்வப்போது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவே கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது.

அதன்பிறகு தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி நேற்று குரும்பபாளையம், எஸ்.எஸ்.குளம் ஸ்ரீகார்டன் 1-வது வீதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட வீட்டிற்கு உள்ளேயும், அந்த பகுதியிலும் கவச உடை அணிந்ததபடி சென்று சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபோன்று ஆர்.எஸ்.புரம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒத்துழைக்க வேண்டும்

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். லேசான சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்தி ரிக்கு செல்ல வேண்டும்.

டாக்டர்களின் சீட்டு இன்றி தாங்களாக மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story