தொழுநோய் கண்டறியும் பணி தீவிரம்


தொழுநோய் கண்டறியும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 July 2023 12:25 AM IST (Updated: 23 July 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பணி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. வருகிற 2-ந் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. இப்பணியில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 157 நபர்களை பரிசோதித்துள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளையும் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகளான உணர்ச்சியற்ற, வெளிர்ந்த, சிவந்த தேமல், நரம்புகள் தடித்திருத்தல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை பொதுமக்கள் அணுகலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story