தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். வருகிற 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.