கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி தீவிரம்
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கால்வாய்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா?, நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகள் இன்றி உள்ளதா? என துப்புரவு மேற்பார்வையாளர்களிடம் நகராட்சி தலைவர் கேட்டறிந்தார். அப்போது கவுன்சிலர்கள் ராமலிங்கம், ரமேஷ்பாபு, சந்திரகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story