நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரம்


நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
x

தாயில்பட்டி பகுதிகளில் மக்காச்சோளத்தில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதிகளில் மக்காச்சோளத்தில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மருந்து தெளிக்கும் பணி

தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, எட்டக்கப்பட்டி சிப்பிப்பாறை, குகன்பாறை, அலமேலுமங்கைபுரம், சல்வார்பட்டி, வெற்றிலையூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை காரணமாக நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகியவை 2,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த செடிகளுக்குள் களைச்செடிகளும் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்தநிலையில் குருத்துப்புழு, படைப்புழு ஆகிய நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்கள் பற்றாக்குறை

இதுகுறித்து செவல்பட்டி விவசாயி முத்துராமலிங்கம் கூறியதாவது:-

சாரல் மழை தொடர்ந்து பெய்வதால் களைச்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. மேலும் மழைக்காலம் தொடங்குவதற்குள் வளர்ந்துள்ள களைசெடிகளை அகற்றுவது வழக்கம்.

களைகளை ஆட்கள் மூலமாக அகற்றுவதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் சிரமப்படுகிறோம். இதனால் விவசாய நிலங்களில் நாங்களே மருந்து தெளித்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல், உரமிடும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story