நாகர்கோவிலில் ரூ.47½ லட்சத்தில் சுப்பையார் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் மேயர் மகேஷ் ஆய்வு


நாகர்கோவிலில் ரூ.47½ லட்சத்தில் சுப்பையார் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் மேயர் மகேஷ் ஆய்வு
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:03+05:30)

நாகர்கோவிலில் ரூ.47½ லட்சத்தில் சுப்பையார் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடப்பதை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பில் உள்ள சுப்பையார் குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்த நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து ரூ.47 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேற்று காலையில் ஆய்வு செய்தார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்பையார் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் குளம் மாசடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்தில் 14 ஆயிரம் யூனிட் சகதிகள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலமாக கழிவுகள் அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.

குளத்தை சுற்றி சேதம் அடைந்துள்ள சுற்றுச்சுவரும் சீரமைக்கப்படும். ஏற்கனவே குளத்தில் கிடந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு உள்ளது. குளத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் கிருஷ்ணன் கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீர் பைப் லைன் மூலமாக சுப்பையார் குளத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பைப் லைன்கள் ஏற்கனவே உள்ளன. அதன் மூலமாக தண்ணீர் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாநகர செயலாளர் ஆனந்த், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜெகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சேகர், கலா ராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story