11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 6 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் பணி தீவிரம்


11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 6 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
x

கோப்புப்படம் 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த சைக்கிள்களுக்கான பொருட்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் விலையில்லா சைக்கிள்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுவது போல் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story