ரெயில் நிலையம், தண்டவாளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு


ரெயில் நிலையம், தண்டவாளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரெயில் நிலையம், ரெயில்வே தண்டவாளங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

மானாமதுைர,

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரெயில் நிலையம், ரெயில்வே தண்டவாளங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் நாளை(திங்கட்கிழமை) சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி மானாமதுரை ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ெரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அவர்கள் உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர் ெரயிலில் செல்லும் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

இதையடுத்து மானாமதுரை ெரயில்வே பாலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ், தனிப்பிரிவு போலீசார் ராஜ்குமார் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

காரைக்குடி

அதே போல காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் காரைக்குடியில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், லாட்ஜ்களில் சோதனையிடப்பட்டு அதில் தங்கி இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

காரைக்குடி ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் சவுதாமா, ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையொட்டி ரெயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன.



Next Story