நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருவதால், நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருவதால், நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்பு
இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் ரெயில்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு சோதனை
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் தலைமையில் போலீசார், ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிபொருட்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் செல்வி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.