மின்னல் தாக்கிய மாணவருக்கு தீவிர சிகிச்சை


மின்னல் தாக்கிய மாணவருக்கு தீவிர சிகிச்சை
x

மேல்மலையனூர் அருகே மின்னல் தாக்கிய மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் விஷால் (வயது 14). இவர் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விஷால் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து தாயனூர் முருகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது விஷாலை மின்னல் தாக்கியது. இந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த விஷாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story