சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை


சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை
x

குமரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை

கன்னியாகுமரி

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குமரி- கேரளா எல்லை சோதனைச்சாவடி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்த பிறகே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கிறார்கள்.

இதே போல் கோழிவிளை சோதனைச்சாவடி மற்றும் பளுகல், புலியூர் சாலை, நெட்டா, படந்தாலுமூடு, ஊரம்பு போன்ற பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. மேலும் சமூக விரோதிகளை அடையாளம் காணும் வகையில், சந்தேகப்படும்படியான நபர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்த பின்னரே தமிழகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story