நாகர்கோவிலில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி
நாகர்கோவிலில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடந்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடந்தது.
கைப்பந்து போட்டி
கன்னியாகுமரி மாவட்ட கைப்பந்து கழகம், டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் கிளப் அணிகளுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. போட்டியை மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் நீலகண்டன் கலந்து கொண்டார். முதல் நாளான நேற்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் பிரிவில் 9 அணிகளும், ஆண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொண்டன.
நிகழ்ச்சியில் மாநில கைப்பந்து கழக இணை செயலாளர் ரத்தின பாண்டியன், குமரி மாவட்ட கைப்பந்து கழக இணை செயலாளர் அமர்நாத், மாவட்ட தலைவர் சுரேந்திர குமார், அவைத்தலைவர் டென்னிஸ், உதவி தலைவர்கள் செல்ல சிவலிங்கம், சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரிகளுக்கும், நாளை (சனிக்கிழமை) கிளப் அணிகளுக்கும் இடையே கைப்பந்து போட்டி நடக்கிறது. இறுதிப் போட்டியை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பரிசு வழங்குகிறார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட கைப்பந்து கழக முதன்மை புரவலர் தேவபிரசாத் ஜெயசேகரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.