இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டியில் நின்று செல்லும்

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டியில் நின்று செல்லும்
x

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டியில் நின்று செல்லும்

திருப்பூர்

திருப்பூர்

சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சாமல்பட்டியில் மாலை 5.49 மணிக்கு சென்று அங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 10.15 மணிக்கு வந்தடையும். இதுபோல் கோவையில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சாமல்பட்டி ரெயில் நிலையத்துக்கு 9.54 மணிக்கு செல்லும். அங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை மதியம் 1.50 மணிக்கு சென்று சேரும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story