வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்க வேண்டும் -விக்கிரமராஜா


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்க வேண்டும் -விக்கிரமராஜா
x

சாத்தான்குளத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போன்று வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறிய பெட்டிக்கடையில் இருந்து சூப்பர் மார்க்கெட் வரையிலான கடைகளும் வெள்ளத்தில் சேதமடைந்து பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story