இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்
தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தொடர்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் www.tntourismtors.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
சுற்றுலாத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், கூடார சுற்றுலா நடத்துபவர்கள் மற்றும் கேரவேன் வாகனம் சுற்றுலா நடத்துபவர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பான தகவல் பெறுவதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவித்துக்கொள்ளலாம். 99948 36365, 0421 2971187 என்ற தொலைபேசி எண்ணிலும், touristofficetiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் அனைவரும் இந்த சுற்றுலா திட்டங்களில் இணைந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.