இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் அ.தி.மு.க. நிலைபாடு என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்


இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் அ.தி.மு.க. நிலைபாடு என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
x

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் அ.தி.மு.க. நிலைபாடு என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி

கோவில்பட்டி, ஆக.18-

கோவில்பட்டியில் புதன்கிழமை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை நீதிமன்றம் முடிவு செய்துவிட முடியாது. அதனை அந்த கட்சியின் செயற்குழு, பொதுக்குழு தான் முடிவு செய்ய முடியும். கட்சிக்கு யார் தலைவராக வரவேண்டும். யார் வழிநடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பது கட்சியின் தொண்டர்கள் தான்.

நீதிமன்றம் கட்சியை வழிநடத்த முடியாது. இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, கண்டிப்பாக மேல்முறையீடு செய்வார்.

நீதிமன்றத்துக்கு அரசியல் ரீதியான கட்சியின் நிலைப்பாடுகள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அடிப்படை பிரச்சினையே இரட்டை தலைமை வேண்டாம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தேவையில்லை என்பதுதான். மீண்டும் அதே நிலை நீடிக்க வேண்டுமென்றால், தொண்டர்கள் முடிவு செய்துதான் கட்சி நடத்த முடியுமே தவிர, நீதிமன்ற வழிகாட்டுதல்படி எப்படி கட்சி நடத்த முடியும். அந்த வகையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. எனவே, நீதிமன்றத்தில் எதிர்தரப்பினர் வைத்த வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறியிருக்கலாம். ஆனால், நிச்சயமாக கட்சியை வழிநடத்துவதாக அந்த தீர்ப்பு இருக்காது. எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story