கலப்பு திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு


கலப்பு திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு
x

நெல்லையில் கலப்பு திருமணம் செய்த தம்பதி 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் மிரட்டுவதாக பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு வழங்கினர்.

திருநெல்வேலி

நெல்லையில் கலப்பு திருமணம் செய்த தம்பதி 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் மிரட்டுவதாக பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு வழங்கினர்.

கலப்பு திருமணம் செய்த தம்பதி

நெல்லை அருகே பாளையஞ்செட்டிகுளம் பிரபுநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சந்தனபிரியா (வயது 28).

இவர்கள் நேற்று தங்களது 2 பெண் குழந்தைகள் மற்றும் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்ட சிலருடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சந்தனபிரியா மனு வழங்கினார்.

அதில் கூறி இருப்பதாவது:-

கொலை மிரட்டல்

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். எங்களது திருமணத்தை பதிவு செய்து சான்று பெற்றுள்ளோம்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரம் சாலைத்தெருவில் வசிக்கும் எனது பெற்றோர் சரவணன், வேலம்மாள் ஆகியோர் என்னை அவர்களது வீட்டுக்கு அழைத்து சென்று, என்னை தங்களுடன் வருமாறும், இல்லையெனில் என்னையும், என்னுடைய கணவரையும் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள். நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம்.

எனவே எனக்கும், என்னுடைய கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளின் உயிருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் மிரட்டல் விடுத்த என்னுடைய பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story