சர்வதேச சதுரங்க நாள் விழா
காரைக்குடி முத்துப்பட்டினம் வித்யாகிரி மெட்ரிக்பள்ளியில் சர்வதேச சதுரங்க நாள் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி முத்துப்பட்டினம் வித்யாகிரி மெட்ரிக்பள்ளியில் சர்வதேச சதுரங்க நாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன், சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் சேவு.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சதுரங்கம் குறித்து தமிழாசிரியர் செயம்கொண்டான் பேசினார். புதுவயல் பள்ளி முதல்வர் குமார் வரவேற்றார். முன்னதாக பிரமாண்ட அளவிலான சதுரங்க பலகை மாணவர்களால் உருவாக்கப்பட்டு அதில் பள்ளி மாணவர்கள் சதுரங்கம் விளையாடினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story