சர்வதேச செஸ் போட்டி


சர்வதேச செஸ் போட்டி
x

திருப்பத்தூரில் சர்வதேச செஸ் போட்டி நடைெபற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் முதலாவது திருப்பத்தூர் ஓபன் 2023 என்ற சர்வதேச செஸ் போட்டி அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒரு வீரர் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 310 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சென்னை ஒலிம்பியாட் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட பிரபல சர்வதேச செஸ் நடுவர் பேராசிரியர். அனந்தராம் இப்போட்டியின் முதன்மை நடுவராக இருந்து நடத்தினார்.

8 சுற்றுக்கள் முடிவில் ஆந்திர வீரர் பனி கனூரி 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். தமிழ்நாட்டை சேர்ந்த விக்னேஷ்வரன் 2-ம் இடமும், சென்னை ஐ.சி.எப். அணியை சேர்ந்த வீரர் பூபாலன் 3-ம் இடமும் பிடித்தனர். ரூ.2½ லட்சம் மதிப்பிலான பரிசுகள் பல்வேறு பிரிவுகளில் 111 வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story