இலங்கையில் சர்வதேச கராத்தே போட்டி: பதக்கம் வென்ற ஈரோடு வீரர்களுக்கு வரவேற்பு
இலங்கையில் சர்வதேச கராத்தே போட்டி: பதக்கம் வென்ற ஈரோடு வீரர்களுக்கு வரவேற்பு
இலங்கையில் உள்ள இன்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பு உலக அளவில் 2-வது சர்வதேச கராத்தே சாம்பியன் கோப்பை போட்டியை நடத்தியது. இதில் 7 நாடுகளை சேர்ந்த சுமார் 600 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணி சார்பாக இ.கெபிராஜ் தலைமையில் தமிழ்நாடு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த அணியில் ஈரோடு புதோகாய் கராத்தே பயிற்சி பள்ளி வீரர்-வீராங்கனைகள் ஈ.எஸ்.கீர்த்திவாசன், எஸ்.பிரகதீஸ்வரன், கே.உதயன், என்.சென்விகா ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்றனர். மொத்தம் 5 தங்கம், 3 வெள்ளிப்பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ரெயில் மூலம் ஈரோடு வந்தனர். அவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் என்.வீராசாமி, ஈரோடு மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஏ.சக்திவேல் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொருளாளர் பி.ஆனந்தன், எம்.கோவிந்தராஜ், ரமேஷ், ஜனார்த்தனன், மனோஜ்குமார், ஆனந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.