சர்வதேச கருத்தரங்கம்


சர்வதேச கருத்தரங்கம்
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

ஸ்ரீராஜராஜன் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக ராமநாதபுரம் வளாகம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலின் துறைத்தலைவர் சொர்ணகீர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மற்றொரு சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் முகமது மன்சூர் ரூமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் மின்னியல் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் நினைவு புத்தகம் வெளியிடப்பட்டது. சர்வதேச கருத்தரங்கின் தலைப்பை பற்றி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலின் துறைத்தலைவர் இஸபெல்லா ராணி எடுத்துரைத்தார். விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள், பேராசிரியர் ஆண்ட்ரீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story