தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக்கூறி பா.ஜ.க. நுழைய முயற்சிக்கிறது- ஈரோட்டில் ஐ.மு.மு.க. தலைவர் ஹைதர் அலி பேட்டி

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக்கூறி பா.ஜ.க. நுழைய முயற்சிக்கிறது- ஈரோட்டில் ஐ.மு.மு.க. தலைவர் ஹைதர் அலி பேட்டி
x

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக்கூறி பா.ஜ.க. நுழைய முயற்சிக்கிறது- ஈரோட்டில் ஐ.மு.மு.க. தலைவர் ஹைதர் அலி பேட்டி

ஈரோடு

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹைதர் அலி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்திருப்பதை வரவேற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பாக வீரப்பன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இரு சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று சிறையில் இருக்கும் முஸ்லிம்களையும் அரசு பாரபட்சம் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும். கோவையில் நடந்தது குண்டு வெடிப்பு அல்ல. கியாஸ் சிலிண்டர் வெடிப்பு. அது எப்படி வெடித்தது என்பது ஆய்வுக்குரியது. அரசின் ரகசிய அறிக்கையை வெளியிடும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக்கூறி பா.ஜ.க. நுழைய முயற்சிக்கிறது. அது நடக்காது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களை எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஈரோடு மாவட்ட தலைவர் ஜாபர்அலி, செயலாளர் ஜாபர்சாதிக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story