கூடுதலாக ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு


கூடுதலாக ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு
x

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு கூடுதலாக ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான நேர்முகத்தேர்வு நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் 152 பெற்றோர்கள், பாதுகாவலர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுடன் கலந்து கொண்டனர். அவர்களில் 77 பேர் பாதுகாவலர் உதவித்தொகைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 23 மாற்றுத்திறனாளிகள் அதிக உதவித் தொகை பெற பரிந்துரைக்கப்பட்டனர். 15 பேர் கூடுதல் உதவித் தொகைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களுக்கான பரிந்துரை ஆணையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், அரசு டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story