பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்


பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்
x

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை விடுதிகளில் காலியாக இருக்கும் தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாக உள்ள 23 தூய்மை பணியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்காணல் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக விண்ணப்பித்து இருந்த 422 பேருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் நேர்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நேர்காணல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் குமரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் ஆகியோர் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு குழுவின் தலைமையில் நடந்தது.

தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் இந்த பணியிடத்திற்கு பட்டதாரிகள் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் பணியாளர்களும் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்தனர்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர் பட்டியல் வருகிற 30-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story