கிராம உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு


தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.

நேர்முக தேர்வு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி தாலுகாவில் திப்பம்பட்டி, சேர்வகாரன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கஞ்சம்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, ஆச்சிப்பட்டி, கோமங்கலம், வெள்ளாளபாளையம், நல்லாம்பள்ளி ஆகிய 9 கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மாதம் 4-ந் தேதி எழுத்து தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் வைரமுத்து தலைமையில் நேர்முக தேர்வு நடைபெற்றது. மேலும் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

சைக்கிள் ஓட்டினர்

இந்த பணியிடத்திற்கு சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் என்பதால், தாலுகா அலுவலகத்திற்கு வெளியே நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர். அப்போது சிலர் சைக்கிள் ஓட்ட தெரியாமல் தடுமாறினார்கள். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு 9 இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை நிரப்புவதற்கு வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளிலும் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 496 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்றனர்.

இதேபோன்று ஆனைமலை தாலுகாவில் தேவிபட்டணம், குப்புச்சிபுதூர், சுப்பையகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு 262 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து நேற்று ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ரேணுகாதேவி தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் துணை தாசில்தார் அனுசுயா, சமூக நல தனி தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story