ரேஷன் கடை பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு


ரேஷன் கடை பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது.

சிவகங்கை

ரேஷன் கடை பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது.கூட்டுறவுத் துறையின் கீழ் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 91 விற்பனையாளர்கள் மற்றும் 12 எடையாளர் காலி பணியிடத்தில் ஆட்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு 8,314 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜீனு தலைமையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக கூட்டுறவு துறை அதிகாரிகளை கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நேர்முக தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story