இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை விமரிைசயாக கொண்டாட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அப்போது இந்துக்கள் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். குறப்பிட்ட நாட்களுக்கு பின்னர் அந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது வழக்கம்.
களிமண்ணாலான சிலைகள்
அந்தவகையில் விழாவினை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சி.ஈஸ்வரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்துள்ளனர். விநாயகர் சிலை வைப்பவர்கள் காவல் ்துறையினரால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
அனுமதி பெற்ற பிறகு சிலை அமைக்க வேண்டும், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு ஓலைகளால் ஆன மேற்கூரை அமைக்கக்கூடாது. மின்சாரம் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கினார்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு எடுத்து செல்லும்போது கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பதில் அளித்த போலீசார் அரசு தான் அதை முடிவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.
இப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் துணை சப் இன்ஸ்பெக்டர்கள் கருப்புசாமி மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி மாவட்டம் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.