பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம்; தப்பிய வாலிபர் சென்னையில் கைது


பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம்; தப்பிய வாலிபர் சென்னையில் கைது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:18 AM IST (Updated: 10 Jun 2023 11:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீடு புகுந்து நகை, செல்போனை பறித்துவிட்டு பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரையில் வீடு புகுந்து நகை, செல்போனை பறித்துவிட்டு பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

பெண் பாலியல் பலாத்காரம்

மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணிடம் இருந்த 4 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இளையான்குடி வாலிபர் கைது

அந்த நபரை பிடிக்க, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஊமச்சிகுளம் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் மேற்பார்வையில், சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சென்னை, திருமுல்லைவாயில் பகுதியில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 4 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் மீட்டனர்.

பெண் ஊழியர்

கைது செய்யப்பட்ட ராஜேஷ்கண்ணன் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண் மதுரையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கணவர் இறந்து விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கடந்த 3 தினங்களாக ராஜேஷ் கண்ணன் நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவில் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் சிகிச்சையில் இருக்கிறார் என்றனர்.


Related Tags :
Next Story