சேலத்தில் பரபரப்புதனியார் ஆஸ்பத்திரியில் குளித்த போது வீடியோ எடுத்ததாக பெண்ணுக்கு மிரட்டல்2 முறை செல்போனில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை


சேலத்தில் பரபரப்புதனியார் ஆஸ்பத்திரியில் குளித்த போது வீடியோ எடுத்ததாக பெண்ணுக்கு மிரட்டல்2 முறை செல்போனில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை
x
சேலம்

சேலம்

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் குளித்த போது வீடியோ எடுத்ததாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து 2 முறை செல்போனில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

சேலம் அருகே பெரிய வீராணம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவர் சேலம் 2-வது அக்ரஹாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவரது மனைவி அவரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டார். பின்னர் தொழிலாளி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் தொழிலாளி மனைவியின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது அங்கு உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த போது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளேன். அது என்னிடம் உள்ளது. எனவே நான் கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும். இல்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து உள்ளார்.

போலீசார் விசாரணை

பின்னர் நேற்றும் அந்த மர்ம நபர், பெண்ணை தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த பெண் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 2 செல்போன் எண்களில் இருந்து பெண்ணை தொடர்பு கொண்டு மிரட்டி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மர்ம நபர் யார்? உண்மையில் குளிப்பதை வீடியோ எடுத்து உள்ளாரா? இல்லை மிரட்டுகிறாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story