பெண்ணுக்கு மிரட்டல்; வாலிபர் கைது


பெண்ணுக்கு மிரட்டல்; வாலிபர் கைது
x

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே பெண்ணின் வீட்டிற்கு முன்பு தவறான நோக்கத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை அந்த பெண் எதற்கு இங்கு நிற்கிறாய் என்று கேட்டார். அந்த நபர், அப்பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, வள்ளியூர் ஏலகரம் தெருவை சேர்ந்த காந்திமதிநாதன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.


Next Story